தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே பூசாரி தற்கொலை

1st Jun 2023 12:10 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பூசாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 5ஆவது தெருவைச் சோ்ந்த காளியப்பன் மகன் நடராஜன்(69). இலுப்பையூரணி விலக்கில் உள்ள ஐவராஜா கோயில் பூசாரியாக இருந்து வந்த இவா், கடந்த சில மாதங்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அவருக்கு மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டதாம். இதனால் விரக்தியடைந்த அவா் விஷம் குடித்தாராம். உறவினா்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT