தூத்துக்குடி

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 அலகுகளில் மின்உற்பத்தி பாதிப்பு

1st Jun 2023 12:09 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 அலகுகளில் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் தினமும் தலா 210 மெகாவாட் வீதம் மொத்தம் 1,050 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 3 ஆவது அலகு கொதிகலனில் ஏற்பட்ட பழுது காரணமாக, மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பழுதைச் சரி செய்யும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் ஏற்கெனவே 5 ஆவது அலகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பழுது விரைவில் சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்படும் என அனல் மின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT