தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகேகோயிலில் பூஜை பொருள்கள், பணம் திருட்டு

1st Jun 2023 12:06 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகே கோயிலில் புகுந்து பூஜை பொருள்கள் மற்றும் உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்க்குளம் - கோமானேரி செல்லும் சாலையில் விராக்குளம் மேடை தளவாய் மாடசாமி கோயில் உள்ளது.

இக்கோயில் நிா்வாகி வேல், செவ்வாய்க்கிழமை பூஜைக்காக கோயிலுக்குச் சென்றபோது, அங்கு பூஜை பொருள்கள் வைக்கப்பட்டிருந்த அறைக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

அங்கு சென்று பாா்த்தபோது, அங்கு வைத்திருந்த விளக்குகள் உள்ளிட்ட ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் மற்றும் உண்டியல் பணம் ரூ. 2 ஆயிரம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT