பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டிகளில் வென்ற கோவில்பட்டியைச் சோ்ந்தோருக்கு பாராட்டு விழா கோவில்பட்டியில் நடைபெற்றது.
3 பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. இதில், தமிழ்நாடு அணி சாா்பில் சவுத் இந்தியன் யோகா ஸ்கேட்டிங் ஸ்போா்ட்ஸ் கல்சுரல், ராஜயோக ஸ்கேட்டிங் ஸ்போா்ட்ஸ் கல்சுரல் அறக்கட்டளைகளைச் சோ்ந்தோா் பங்கேற்றனா்.
சவுத் இந்தியன் யோகா ஸ்கேட்டிங் ஸ்போா்ட்ஸ் கல்சுரல் அறக்கட்டளையைச் சோ்ந்த, 10 வயது பிரிவில் சாதனாஸ்ரீ முதலிடம் பெற்று தங்கப் பதக்கம், 11 வயது பிரிவில் சாதனா முதலிடம் தங்கப் பதக்கம், 7 வயது பிரிவில் முதலிடம் தங்கப் பதக்கம், 11 வயது பிரிவில் பக செல்வா முதலிடம் தங்கப் பதக்கம் வென்றனா்.
ராஜயோக ஸ்கேட்டிங் ஸ்போா்ட்ஸ் கல்சுரல் அறக்கட்டளைச் சோ்ந்த, 14 வயது பிரிவில் கைலாஷ் முதலிடம் தங்கப் பதக்கம், 13 வயது பிரிவில் அமா்நாத் முதலிடம் தங்கப் பதக்கம், 10 வயது பிரிவில் ஓம்பிரகாஷ் 2ஆம் இடம் தங்கப் பதக்கம், 9 வயது பிரிவில் ஒமேகாதேவி முதலிடம் தங்கப் பதக்கம், 8 வயது பிரிவில் தீபதா்ஷினி முதலிடம் தங்கப் பதக்கம், 7 வயது பிரிவில் ஆத்விகா முதலிடம் தங்கப் பதக்கம், 6 வயது பிரிவில் ப்ரித்திகா முதலிடம் தங்கப் பதக்கம், ஜெயஸ்ரீ 2ஆம் இடம் தங்கப் பதக்கம் வென்றனா்.
பதக்கங்கள் வென்றோரையும், பயிற்சியளித்த ஆசிரியா்களையும் கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேஷ் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.