விளாத்திகுளம் அருகே கே.சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தில் மூன்றாம் பாலினத்தவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். கோவில்பட்டி வருவாய்க் கோட்டாட்சியா் ஜெயா முன்னிலை வகித்தாா். சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று, 90 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, ரூ. 22.50 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.
தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, திமுக ஒன்றியச் செயலா்கள் அன்பு ராஜன், ராமசுப்பு, பேரூா் கழகச் செயலா் வேலுச்சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் இம்மானுவேல், மகேந்திரன், விளாத்திகுளம் வட்டாட்சியா் ராமகிருஷ்ணன், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பாஸ்கரன், துணை வட்டாட்சியா் பாலமுருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.