சாத்தான்குளம் கிருஷ்ணன் கோயில் தெருவில், சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, குரு பூஜை கொண்டாடப்பட்டது. முன்னதாக, கொடியேற்றப்பட்டு, அவரது படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், சாத்தான்குளம் பேரூராட்சி உறுப்பினா் சுந்தா், முன்னாள் உறுப்பினா் சுப்பிரமணியன், இசக்கிமுத்து, பிச்சுமணி, முத்துமாரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.