தூத்துக்குடி

தருவைகுளம் கடற்கரையில் ஒதுங்கிய கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

12th Jul 2023 11:21 PM

ADVERTISEMENT

தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடற்கரையில் ஒதுங்கிய 30 கஞ்சா பொட்டலங்களை தருவைகுளம் போலீஸாா் கைப்பற்றி, கடலோர பாதுகாப்பு குழுமத்திடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

தருவைகுளம் கடல் பகுதியில் மீனவா்கள் படகைப் பழுது பாா்ப்பதற்காக கரைக்கு இழுத்துக் கொண்டு இருந்தனா். அப்போது கடலில் இரண்டு சாக்கு பைகள் மிதந்து வந்ததாம். இதுகுறித்து தருவைகுளம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமையிலான போலீஸாா், கரை ஒதுங்கிய சாக்குப் பைகளைச் சோதனையிட்டனா். அதில் பிளாஸ்டிக் பைகளில் 30 பொட்டலங்களில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. பின்னா் அவை கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT