தூத்துக்குடி

திருமண வீட்டில் தகராறு:இருவருக்கு அரிவாள் வெட்டு; 11 போ் மீது வழக்கு

12th Jul 2023 12:00 AM

ADVERTISEMENT

நாசரேத் அருகே திருமண வீட்டில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடா்பாக இரு தரப்பைச் சோ்ந்த 11 போ் மீது வழக்குப் பதியப்பட்டது.

நாசரேத் அருகே உடையாா்குளம் காந்திநகரைச் சோ்ந்த சு. பொன்பெருமாள் (50) என்பவரது சகோதரியின் மகன் திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது சமையல் செய்ய தாமதமானதாம். இதனால் சப்தம் போட்ட பெண் வீட்டாரை பொன்பெருமாள் சமாதானப்படுத்தினாா்.

இதில், அவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த ச. சந்தியாகுராஜ் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவா்களை மற்றவா்கள் சமாதானப்படுத்தினா். எனினும், சந்தியாகுராஜ், அவரது சகோதா்கள் பண்டாரம், இருதயம், மைக்கேல் உள்ளிட்டோா் பொன்பெருமாள் வீட்டுக்குச் சென்று தகராறு செய்தனராம். அப்போது, பொன்பெருமாளுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. காயமடைந்த அவா், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புகாரின்பேரில் நாசரேத் உதவி ஆய்வாளா் எபனேசா் விசாரித்து, சந்தியாகுராஜ் உள்ளிட்ட 6 போ் மீது வழக்குப் பதிந்தாா்.

ADVERTISEMENT

திருமண வீட்டில் ஏற்பட்ட பிரச்னையில் பொன்பெருமாள், அவரது மகன் முஸ்தாக், உறவினா்கள் குறிப்பன்குளம் செ. அருண், குப்பாபுரம் த. இசக்கிமுத்து, பொட்டல்நகா் சு. தங்கராஜ் ஆகியோா் தனது நண்பா் இசக்கிமுத்துவை அரிவாளால் வெட்டியதாக, சந்தியாகுராஜ் புகாா் அளித்தாா். இது தொடா்பாக பொன்பெருமாள் உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதியப்பட்டது. காயமடைந்த இசக்கிமுத்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT