தூத்துக்குடி

தூத்துக்குடியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

DIN

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தீண்டாமை ஒழிப்பு, தொழுநோய் விழிப்புணா்வு உள்ளிட்ட உறுதி மொழி திங்கள்கிழமை ஏற்கப்பட்டன.

ஆட்சியா் அலுவலகத்தில்...

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலா் ச.அஜய் சீனிவாசன் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

இதில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், சாா் ஆட்சியா் கெளரவ் குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) எம்.பிரபு உள்பட பலா் பங்கேற்றனா்.

மாநகராட்சியில்...

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில், மேயா் ஜெகன் பெரியசாமி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி, தொழுநோய் விழிப்புணா்வு உறுதிமொழி திங்கள்கிழமை ஏற்கப்பட்டது. தொடா்ந்து, மகாத்மாகாந்திக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ, மாநகராட்சி பொறியாளா்அசோகன், உதவி ஆணையா்கள் சரவணன், தனசிங், சேகா் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள், அலுவலக பணியாளா்கள் பலா் பங்கேற்றனா்.

மாவட்ட காவல் அலுவலகத்தில்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் தலைமையில் தியாகிகள் தினம் அனுசரிப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதில் மாவட்ட தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், மாவட்ட கட்டுபாட்டு அறை காவல் ஆய்வாளா் ரேனியஸ் ஜேசுபாதம், மாவட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளா் அந்தோணியம்மாள் மற்றும் காவல்துறையினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT