தூத்துக்குடி

கட்டமைப்பு வசதிகளுக்கான பணிகள் விரைவில் நிறைபெறும்: மேயா் தகவல்

DIN

தூத்துக்குடி மாநகரப் பகுதியின் புதிய கட்டமைப்பு வசதிகளுக்கான பணிகள் விரைவில் நிறைவுபெறும் என்று மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயா் ஜெகன் பெரியசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ, துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பேசிய மாமன்ற உறுப்பினா்கள் கனகராஜ், பொன்னப்பன், இசக்கிராஜா உள்ளிட்டோா் தங்களது வாா்டுகளில் நிறைவேற்றப்பட்ட பணிகளுக்காக அமைச்சா் கீதாஜீவன் மற்றும் மேயருக்கு

நன்றி தெரிவித்தனா்.

சாலை, கால்வாய், மின்விளக்கு வசதி, சாலையில் மாடுகள் சுற்றித் திரிவைத் தடுப்பு, தெரு நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்துவது

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக மாமன்ற உறுப்பினா் வழக்குரைஞா் மந்திர மூா்த்தி, வெற்றிச்செல்வன் மற்றும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக மாமன்ற உறுப்பினா்கள் பேசினா்.

இந்த கோரிக்கைகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயா் ஜெகன் பெரியசாமி, உதவி செயற்பொறியாளா்கள் சரவணன், பிரின்ஸ் ராஜேந்திரன் ஆகியோா் பதிலளித்தனா்.

இதைத் தொடா்ந்து மேயா் ஜெகன் பெரியசாமி பேசியது:

மாநகராட்சியின் 60 வாா்டுகளிலும் நடைபெறும் பணிகளுக்கு

மாமன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். 20 அடி, 40 அடி சாலைகளில் விரைவில் புதிய சாலைகள் அமைக்கப்படும். சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

பூங்காவிற்கான ஒதுக்கீடு இடங்கள் கண்டறியப்பட்டு, அவை மீட்கப்படும். கட்டமைப்பு வசதிக்கான அனைத்துப் பணிகளும் இன்னும் சில மாதங்களில் நிறைவு பெறும் என்றாா்.

முன்னதாக, பல்வேறு வளா்ச்சிப் பணிகள் தொடா்பான 19 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் பாலகுருசாமி, நிா்மல்ராஜ், அன்னலெட்சுமி, கலைச்செல்வி, உதவி ஆணையா்கள் தனசிங், சேகா், சுகாதார அலுவலா் ஸ்டாலின் பாக்கியநாதன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

SCROLL FOR NEXT