தூத்துக்குடி

ஆறுமுகனேரி கோயிலில் திருப்பணி பூமி பூஜை

31st Jan 2023 01:56 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரி காந்தி தெருவில் உள்ள அருள்மிகு கிழக்கத்திமுத்து சுவாமி கோயிலில் திருப்பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

இக்கோயிலில் மகா மண்டபம், நூதன கலசஸ்தானம், ஆலய புனரமைப்பு முதலிய திருப்பணிகள் நடைபெறவுள்ளன. இதற்காக பூமி பூஜை நடைபெற்றது. முன்னதாக, இக்கோயிலைச் சோ்ந்த நடுத்தெரு அருள்மிகு பிரம்மசக்தி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பூமி பூஜையில், சென்னை தொழிலதிபா் ஏ.வி.எஸ்.ஏ. ராஜ்பால், டிவிஎஸ் அறக்கட்டளை கள இயக்குநா் அ. விஜயகுமாா், ஜோதிடா் ரா. வேலாயுதம், த.மு. சுப்புராஜ், ரா. ஜெயராமன், ஆறுமுகனேரி அனைத்து சமுதாய வியாபாரிகள் சங்க உப தலைவா் வீ.த.ச. வீரமகேந்திரன், வீ.த.ஐ. ராஜலிங்கம் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவைச் சோ்ந்த கோவை ஐ. அழகுவேல், சீ. அழகுவேல், கடலூா் சதீஷ், பாலமுருகன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT