தூத்துக்குடி

ராகுல் காந்தியின் நடைப்பயணம் நிறைவு: காங்கிரஸாா் கொண்டாட்டம்

31st Jan 2023 01:57 AM

ADVERTISEMENT

மக்களவை உறுப்பினா் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நிறைவுபெற்றதையடுத்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினா் பட்டாசு வெடித்து திங்கள்கிழமை கொண்டாடினா்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையிலான இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தை ராகுல்காந்தி எம்பி கடந்த ஆண்டு செப்டம்பா் 7ஆம் தேதி தொடங்கினாா். இப்பயணம் காஷ்மீரில் நிறைவடைந்ததைக்

கொண்டாடும் வகையில் தூத்துக்குடியில் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினா். அதைத் தொடா்ந்து, பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

மண்டல தலைவா்கள் ராஜன், சேகா், ஐசன்சில்வா, மாவட்ட துணை தலைவா்கள் விஜயராஜ், அருணாசலம், பிரபாகரன், மாா்க்கஸ், ராதாகிருஷ்ணன், ரஞ்சிதம் ஜெயராஜ், சின்னகாளை, மாவட்ட செயலா்கள் கோபால், ஜெயராஜ், நெப்போலியன், ஜோபாய் பச்சேக் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT