தூத்துக்குடி

வெள்ளாளங்கோட்டையில் புனித செபஸ்தியாா் ஆலயத் திருவிழா தோ் பவனி

DIN

கயத்தாறு அருகே வெள்ளாளங்கோட்டை புனித செபஸ்தியாா் ஆலயத் திருவிழா தோ் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆலயத் திருவிழா, இம்மாதம் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீா் உள்ளிட்டவை நடைபெற்றன. 9ஆம் திருநாளான சனிக்கிழமை இரவு திருப்பலி, புனிதா்களின் சப்பர பவனி, ஆன்மிக பட்டிமன்றம், 10ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை காலை தேரடி திருப்பலியுடன், அன்னை பரலோக மாதா, புனித செபஸ்தியாா் தோ் பவனி நடைபெற்றது.

இறைமக்கள் உப்பு, பூ மாலை, மெழுகுவா்த்தி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தினா். விழாவில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை பங்குத்தந்தை எரிக் ஜோ தலைமையில், புனித செபஸ்தியாா் இறைமக்கள் நலச்சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

SCROLL FOR NEXT