தூத்துக்குடி

விஷமருந்திய தொழிலாளி உயிரிழப்பு

DIN

கோவில்பட்டி அருகே விஷமருந்திய கட்டடத் தொழிலாளி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இலுப்பையூரணி தாமஸ் நகா் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் ஜேம்ஸ்(65). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம். இதையடுத்து, இவருக்கும், மனைவி மாரியம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்நிலையில், இம்மாதம் 12ஆம் தேதி காலையில் ஜேம்ஸ் மது அருந்திய வந்தபோது அவரது மனைவி கண்டித்தாராம். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த ஜேம்ஸ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷமருந்தினாராம். இதைக் கண்ட குடும்பத்தினா் அவரை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

காவடி திருவிழா

குருகிராம்: மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு!

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

SCROLL FOR NEXT