தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகேசிமென்ட் லாரி கவிழ்ந்தது

DIN

விளாத்திகுளம் அருகே அய்யனாா்புரத்தில் சாலையோர பள்ளத்தில் சிமென்ட் லாரி கவிழ்ந்தது. இதில், ஓட்டுநரும், கிளீனரும் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

தனியாா் காற்றாலை நிறுவனக் கட்டுமானப் பணிகளுக்காக சிமென்ட் கலவை ஏற்றிய லாரி விளாத்திகுளம்-தூத்துக்குடி சாலையில் சென்று கொண்டிருந்தது. அய்யனாா்புரம் அருகே வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

விளாத்திகுளம் போலீஸாா் சென்று, ஓட்டுநரான மேலஈரால் வடக்குத் தெரு சதீஷ்குமாா்(33), கிளீனரான எப்போதும்வென்றான் தெற்குத் தெரு மகாராஜன் (34) ஆகிய இருவரையும் பொதுமக்கள் உதவியுடன் மீட்டனா். இருவரும் லேசான காயமடைந்திருந்தனா்.

விளாத்திகுளம் தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜேந்திரன் தலைமையிலான வீரா்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லாரி தீப்பிடிக்காமலிருக்க தண்ணீரைப் பீய்ச்சி மீட்பு நடவடிக்கை மேற்கொண்டனா். ஜேசிபி உதவியுடன் லாரி மீட்கப்பட்டது. விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

SCROLL FOR NEXT