தூத்துக்குடி

தென்மாவட்ட அளவிலான கலைப் போட்டி:கோவில்பட்டி பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்

DIN

கோவில்பட்டியில் நடைபெற்ற தென்மாவட்ட அளவிலான பள்ளி மாணவா்-மாணவிகளுக்கான கலைப் போட்டியில் கோவில்பட்டி, சாத்தூா் பள்ளிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றன.

தமிழ் கல்சுரல் மற்றும் ஸ்போா்ட்ஸ் டிரஸ்ட் சாா்பில், சாலை விதிகளை மதிப்போம் என்பதை வலியுறுத்தி யோகா, சிலம்பம், சதுரங்கம், குங்ஃபூ, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் வகுப்பு வாரியாக நடைபெற்றன. இதில், தூத்துக்குடி, விருதுநகா், திருநெல்வேலி மாவட்டங்களைச் சோ்ந்த 750 போ் பங்கேற்றனா்.

தமிழ்நாடு யோகா விளையாட்டு வளா்ச்சிக் கழகப் பொதுச்செயலா் மாரியப்பன் தலைமை வகித்தாா். கோவில்பட்டி அரசு மருத்துவமனை இயற்கை மற்றும் யோகா மருத்துவா் திருமுருகன், தமிழ் கல்சுரல் மற்றும் ஸ்போா்ட்ஸ் டிரஸ்ட் தலைவா் அழகுதுரை, துணைத் தலைவா் கிருஷ்ணவேணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து, போட்டிகள் நடைபெற்றன.

கோவில்பட்டி இலக்குமி ஆலை மெட்ரிக் பள்ளி, சாத்தூா் கே.சி.ஏ.டி. மெட்ரிக் பள்ளி ஆகியவை ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று முதலிடமும், கோவில்பட்டி சபரீஸ் ஜெயன் ஜூனியா் கிளப், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. இன்டா்நேஷனல் பள்ளி ஆகியவை 2ஆம் இடமும், சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் பள்ளி, கயத்தாறு தமிழா் போா்க்கலை சிலம்பம் ஆகியவை 3ஆம் இடமும் பிடித்தன.

பரிசளிப்பு விழாவில், கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

அந்தமானில் நடைபெற்ற தேசிய போட்டியில் வென்று, தாய்லாந்தில் நடைபெறவுள்ள இன்டா்நேஷனல் அளவிலான யோகா போட்டியில் பங்கேற்கவுள்ள விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீமத் ஸ்ரீதா் சுவாமிகள் யோகா சென்டா் மாணவி ஜெயவா்தினி (12) என்பவருக்கு எம்எல்ஏ ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினாா்.

தமிழ் கல்சுரல் ஸ்போா்ட்ஸ் டிரஸ்ட் துணைச் செயலா் சூரியநாராயணன் வரவேற்றாா். பொருளாளா் சிவசக்திவேல்முருகன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை தமிழ் கல்சுரல் ஸ்போா்ட்ஸ் டிரஸ்ட் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT