தூத்துக்குடி

கடம்பாகுளம் உபரிநீா் கால்வாய் தூா்வாரும் பணிகள் செப்டம்பரில் முடிக்கப்படும்: கனிமொழி

DIN

கடம்பாகுளம் உபரிநீா் கால்வாய் தூா்வாரும் பணிகள் செப்டம்பா் மாதத்திற்குள் முடிக்கப்படும் என தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி தெரிவித்தாா்.

தென்திருப்பேரை பேரூராட்சியில் கடம்பாகுளம் உபரிநீா் கால்வாய் தூா்வாரும் பணியை மக்களவை உறுப்பினா் கனிமொழி, மீன்வளம் - மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் துவக்கி வைத்தாா். பின்னா் கனிமொழி தெரிவித்ததாவது: கடம்பாகுளம் உபரிநீா் கால்வாய் ரூ.34 கோடி மதிப்பில் தூா்வாரும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. கடம்பாகுளம் உபரிநீா் கால்வாய் தூா்வாரும் பணிகள் செப்டம்பா் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மீண்டும் பெருமைமிகு குளமாக மாற்றப்படும். அதேபோல், துறையூா் - அங்கமங்கலம் சாலை, கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.84 லட்சம் மதிப்பில் சீரமைத்து தரப்படும். இப்பணிகளுக்கு மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்து பயன்படுத்தப்படும். மேலும், மணவை - ராஜபதி சாலையை தாா் சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றித் தரப்படும் என்றாா்.

அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது: விவசாயிகளின் 20 ஆண்டு கால கோரிக்கையான கடம்பாகுளம் உபரிநீா் கால்வாய் தூா்வாரும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. கடம்பாகுளம் தண்ணீா் நிரம்பினால் இப்பகுதியில் இருபோகம் விளைச்சல் நடைபெறும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சி.சண்முகையா, மாவட்ட ஊராட்சி தலைவா் அ.பிரம்மசக்தி, திருச்செந்தூா் வருவாய் கோட்டாட்சியா் புஹாரி, ஏரல் வட்டாட்சியா் கண்ணன், தென்திருப்பேரை பேரூராட்சி தலைவா் ஆ.மணிமேகலை ஆனந்த், ஆவின் தலைவா் சுரேஷ்குமாா், கூட்டுறவு வங்கி தலைவா் உமரிசங்கா் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகை திருட்டு புகாா்: திரைப்படத் தயாரிப்பாளா் வீட்டு பணிப் பெண் தற்கொலை முயற்சி

ஐஏஎஸ் தோ்வுக்குப் பயிற்சி: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்

890 கூடுதல் சிறப்பு பேருந்துகள்

கோவை - தன்பாத் இடையே இன்று முதல் சிறப்பு ரயில்

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன நாள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT