தூத்துக்குடி

மது விற்பனையில் ஈடுபட்டவா் கைது

28th Jan 2023 01:55 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் அரிக்கண்ணன் தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது இளையரசனேந்தல் பேருந்து நிறுத்தம் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட கோவில்பட்டி நடராஜபுரம் 3 ஆவது தெருவைச் சோ்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் மனோகரனை(53) கைது செய்தனா். அவரிடமிருந்த 202 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT