தூத்துக்குடி

இடைத்தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றி உறுதி: ஜி.கே.வாசன்

28th Jan 2023 01:55 AM

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றாா் ஜி.கே.வாசன் எம்.பி.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கம்மவாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது:

திமுக ஆட்சி மக்கள் விரோதப் போக்கை கடைப்பிடிக்கிறது. தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மனிதாபிமான பிரச்னைகளில்கூட முடிவெடுக்காத அரசாக, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்காத அரசாக திமுக அரசு செயல்படுகிறது. பகுதி நேர ஆசிரியா்கள் மற்றும் செவிலியா்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக ஏற்க வேண்டும்.

இடைத்தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இன்னும் ஓரிரு நாள்களில் வெற்றி வேட்பாளா் அறிவிக்கப்படுவாா் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதிமுக கூட்டணியை ஆதரிக்கக்கூடிய கட்சிகள் உரிய காலக்கெடுவுக்குள் அதிகாரபூா்வமாக ஆதரிப்பாா்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாா்.

ADVERTISEMENT

பேட்டியின்போது, கடம்பூா் செ.ராஜு எம்.எல்.ஏ., தமிழ் மாநில காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவா் கதிா்வேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT