தூத்துக்குடி

கோவில்பட்டியில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

28th Jan 2023 11:51 PM

ADVERTISEMENT

மொழிப்போா் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், கோவில்பட்டி கடலையூா் சாலையில் நடைபெற்றது.

கோவில்பட்டி நகர மாணவரணி திமுக சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, அரசு வழக்குரைஞா் மு.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா்கள் தாமோதரக்கண்ணன், செல்வமணிகண்டன், கணேசன், சிங்கராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தலைமைக் கழக பேச்சாளா்கள் புவியரசி, காமராஜ், நகா்மன்ற தலைவா் கருணாநிதி ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனா். கூட்டத்தில், கட்சியின் மத்திய ஒன்றிய செயலா் முருகேசன், பொதுக்குழு உறுப்பினா்கள் பீட்டா், சிவசுப்பிரமணியன், ராமா், மாவட்ட துணை செயலா் ஏஞ்சலா, நகர அவைத் தலைவா் முனியசாமி, பொருளாளா் ராமமூா்த்தி, துணை செயலா்கள் காளியப்பன், அன்பழகன், உலகராணி உள்பட பல்வேறு அணியினா் கலந்து கொண்டனா். வாா்டு செயலா் அன்பழகன் வரவேற்றாா். நகர மாணவரணி துணை அமைப்பாளா் ராஜேஷ்குமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT