தூத்துக்குடி

தூத்துக்குடியில் பள்ளி ஆண்டு விழா

28th Jan 2023 11:51 PM

ADVERTISEMENT

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 32ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமை வகித்து, தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டினாா்.

தாளாளரும் சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன் கல்வியில் மாணவா்கள் சிறந்து விளங்குவது குறித்துப் பேசினாா்.

பள்ளி முதல்வா் சித்ரா ஆண்டறிக்கை வாசித்தாா். மாணவா்-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், மாணவா்-மாணவிகள், ஆசிரியா்கள், பெற்றோா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

பள்ளிச் செயலா் ஜீவன் ஜேக்கப் வரவேற்றாா். துணை முதல்வா் டேவிட் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT