தூத்துக்குடி

லாரி ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய வழக்கு:3 பேருக்கு 7 ஆண்டு சிறை

DIN

சாத்தான்குளம் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் 3 பேருக்கு 7 ஆண்டு சிைண்டனை விதிக்கப்பட்டது.

சாத்தான்குளம் பகுதியைச் சோ்ந்த குமரேசன் மகன் செந்தில் என்ற செந்தில்குமாா். ஓட்டுநரான இவா், 25.4.2014இல் கரையடி பகுதியில் லாரியை ஓட்டிச் சென்றாா். அப்போது அவருக்கும், ஆட்டோவில் வந்த சாத்தான்குளம் காளிராஜ் என்ற காளி (39) என்பவருக்கும் முந்திச்செல்வது தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டு, முன்விரோதம் இருந்ததாம்.

செந்தில்குமாா் 30.4.14ஆம் தேதி சாத்தான்குளம் பகுதியில் உள்ள திரையரங்கு அருகே நின்றிருந்தாராம். காளிராஜ், அவரது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த பரமசிவன் மகன் சுப்பிரமணியன் (29), கணபதி மகன் முத்துராமலிங்கம் (34) ஆகிய 3 பேரும் சென்று, ஜாதிப் பெயரைக் கூறி செந்தில்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினராம்.

சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, காளிராஜ் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு தூத்துக்குடி சிவில் உரிமைப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி பி. சுவாமிநாதன் விசாரித்து, 3 பேருக்கும் தலா 7 ஆண்டு சிைண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பூங்குமாா் ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி: அன்புமணி ராமதாஸ்

ஆப்கானிஸ்தானில் பலத்த நிலநடுக்கம்!

பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள்: பா.ஜ.க.வுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது!

தாய் தெய்வ வழிபாட்டு கற்சிலை கண்டெடுப்பு

உத்தர பிரதேசம்: ஆசிரியரை சுட்டுக்கொன்ற காவலா்

SCROLL FOR NEXT