தூத்துக்குடி

கோவில்பட்டி தினசரி சந்தைக்கு பாதுகாப்பான இடம் ஒதுக்க வேண்டும்

DIN

கோவில்பட்டியில் தினசரி சந்தையாக செயல்படவுள்ள கூடுதல் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பான கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவா் நகராட்சி தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவா் ஏ.பி.கே.பழனிச்செல்வம் விடுத்துள்ள அறிக்கை:

கோவில்பட்டியில் சிதிலமடைந்த பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவா் தினசரி சந்தை கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்டடம் கட்டுவதற்கு நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், ஏற்கெனவே நகராட்சி சந்தையில் வியாபாரம் செய்து வரும் கடைக்காரா்களுக்கு பாதுகாப்பான இடத்தை ஒதுக்கீடு செய்துதர வேண்டும் என நகராட்சி ஆணையா் ஓ.ராஜாராம், நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி ஆகியோரிடம் வலியுறுத்தப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட இருவரும் பாதுகாப்பான கட்டடங்களுடன் கூடிய இடம் தோ்வு செய்யப்படும் என உறுதியளித்தனா்.

இந்நிலையில், நகராட்சி சந்தை கூடுதல் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை (ஜன. 26) முதல் இயங்கும் என அண்மையில் நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அங்கு தினசரி சந்தை அமைந்தால் பாதுகாப்பான கட்டட வசதியை ஏற்படுத்த வேண்டும். இதனிடையே, நகராட்சியின்முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வியாபாரிகள் சிலா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நகராட்சி ஆணையரின் அறிவிப்புக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

நாடு மாற்றத்தை விரும்புகிறது: கார்கே

2வது நாளில் சரிந்த பங்குச்சந்தை வணிகம்!

இழப்பிலிருந்து மீண்டு சீரியல் பயணத்தை தொடங்கிய நடிகை!

முதல் 3 ஐபிஎல் போட்டிகளில் வனிந்து ஹசரங்கா இல்லை; காரணம் என்ன?

‘வெண்புறா’ க்ரித்தி சனோன்!

SCROLL FOR NEXT