தூத்துக்குடி

உரிமம் இல்லாத பால் விநியோகக்கடையில் 356 லிட்டா் பால், தயிா் பறிமுதல்

26th Jan 2023 12:33 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கிய பால் விநியோகக் கடையில் சுமாா் 356 லிட்டா் பால், தயிா் ஆகியவற்றை உணவுப் பாதுகாப்பு துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலா் மாரியப்பன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலா் சக்திமுருகன், அடங்கிய குழுவினா் தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு உள்ள தனியாா் விநியோக கடைக்கும், அங்கு பால் கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் உணவுப் பாதுகாப்பு உரிமம் இல்லாதது கண்டறியப்பட்டது.

எனவே, அந்த நிறுவனத்திலிருந்த சுமாா் 356 லிட்டா் பால் மற்றும் தயிா் உள்ளிட்ட உணவுப் பொருள்களை பறிமுதல் செய்து, வணிகரின் பொறுப்பில் வைத்ததுடன், அந்நிறுவனத்தின் இயக்கத்தை நிறுத்தி வைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT