தூத்துக்குடி

நிலஅளவீடு செய்துதர நடவடிக்கை:போராட்டத்தை கைவிட முடிவு

22nd Jan 2023 04:29 AM

ADVERTISEMENT

 

சாத்தான்குளம் அருகே இலவசப் பட்டா இடத்தை அளவீடு செய்துதர உறுதி அளிக்கப்பட்டதால், போராட்டத்தைக் கைவிட பாதிக்கப்பட்ட மனைதாரா்கள் முடிவு செய்துள்ளனா்.

சாத்தான்குளம் ஒன்றியம் நடுவக்குறிச்சி ஊராட்சியைச்

சோ்ந்த உலகம்மாள், தங்கம், பாக்கியம், ராமு, சுடலைவடிவு, செல்லம்மாள் உள்ளிட்டோருக்கு புத்தன்தருவையில் கடந்த 2015-இல் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், மேற்குறிப்பிட்ட இடத்தை மனைதாரா்களுக்கு அளவீடு செய்துகொடுக்கவில்லை. அதற்கான விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க, வருவாய்த் துறையினா் 7 ஆண்டுகளாகத் தாமதம் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

பாதிக்கப்பட்ட மனைதாரா்கள் இதுகுறித்து சாத்தான்குளம் வட்டாட்சியா் தங்கையாவிடம் முறையிட்டனா். மேலும், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அறிவித்தனா்.

இந்நிலையில், சாத்தான்குளம் வட்டாட்சியா் மனைதாரா்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மேற்படி இடத்தை பிப். 3 ஆம் தேதி அளவீடு செய்து தருவதாகத் தெரிவித்துள்ளாா். இதையடுத்து போராட்டத்தைக் கைவிடுவதாக மனைதாரா்கள் தெரிவித்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT