தை அமாவாசையை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் ஏராளமானோா் சனிக்கிழமை புனித நீராடி முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.
அமாவாசையையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலசந்தி பூஜையாகி தீா்த்தவாரி நடைபெற்றது.
காலைமுதலே ஏராளமானோா் கடலில் புனித நீராடி, தங்களது முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்தனா். பின்னா், சுவாமி தரிசனம் செய்தனா். இதனால், கோயிலில் அதிக பக்தா்கள் கூட்டம் காணப்பட்டது.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இரா. அருள்முருகன், இணை ஆணையா் மு. காா்த்திக், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
குற்றாலத்தில்...: தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியிலும் ஆயிரக்கணக்கானோா் புனித நீராடி, அருவிக்கரையில் தங்களது முன்னோருக்கு தா்ப்பண பூஜை செய்து வழிபட்டனா். பின்னா், அருள்மிகு குற்றாலநாதா் கோயிலுக்குச் சென்று வழிபட்டனா். இதனால், பேரருவியில் கூட்டம் அலைமோதியது.