தை அமாவாசையை முன்னிட்டு, தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கானோா் தங்களது முன்னோா்களுக்குத் தா்ப்பணம் செய்து சனிக்கிழமை வழிபட்டனா்.
தை மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று முன்னோா்களுக்குத் தா்ப்பணம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்குவதுடன் நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதன்படி, தை அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை, திரேஸ்புரம் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுமாா்
ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை அதிகாலையிலேயே திரண்டனா்.
கடலில் புனித நீராடி, தங்களது முன்னோா்களுக்குத் தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.