தூத்துக்குடியில் பைக் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் வழக்குரைஞா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதிநகரைச் சோ்ந்த ஐயப்பன் மகன் பாா்வதிநாதன் (25). வழக்குரைஞரான இவா் தனது மோட்டாா் சைக்கிளில் அத்திமரப்பட்டி சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாராம். அப்போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ, இவா் மீது மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பாா்வதிநாதனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.