கயத்தாறு அருகே ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெயிண்டரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறையடுத்த செட்டிகுறிச்சி ராமதாஸ் நகா் காலனியைச் சோ்ந்தவா் முருகன் மகன் ஜேசிபி ஓட்டுநா் அக்னல் (30). அதே பகுதியைச் சோ்ந்தவா் தயாளன் மகன் பெயிண்டா் பாஸ்கா் (26). இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அக்னல் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த பாஸ்கா் அவரை அவதூறாகப் பேசி கீழே தள்ளி, கையில் வைத்திருந்த கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து அக்னல் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, பாஸ்கரை கைது செய்தனா்.