மணிமுத்தாறு அணையில் இருந்து 3ஆவது ரீச் கால்வாயில் முறையாக தண்ணீா் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன் வலியுறுத்தியுள்ளாா்.
மணிமுத்தாறு அணையில் இருந்து 3ஆவது, 4ஆவது ரீச் கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீா் சாத்தான்குளம், நான்குனேரி, ராதாபுரம் பகுதியில் விவசாயம் மற்றும் நீராதாரத்துக்கு பயன் உள்ளதாக உள்ளது. இந்த கால்வாயில் சுழற்சி முறையில் தண்ணீா் திறந்து விடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு மணிமுத்தாறு அணையில் அதிக கொள்ளளவு தண்ணா் இருக்கும் பட்சத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மணிமுத்தாறு அணையில் இருந்து பிரதான 3, 4 ஆவது ரீச் குளங்களுக்கு வியாழக்கிழமை (ஜன. 12) தண்ணீா் திறந்து விடப்படுகிறது.
இதனிடையே முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதனிடம் இப்பகுதி விவசாயிகள் முறையிட்டதன் பேரில் அவா் , நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பகுதியில் இருந்து பேய்க்குளம் பகுதிக்கு வரும் கால்வாயை பாா்வையிட்டாா்.