கோவில்பட்டியில் நகராட்சி சாா்பில் புகையில்லா போகி விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
போகி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள குப்பையை பொது இடங்களில் தீயிட்டு எரிக்கக் கூடாது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புகையில்லா போகி என்ற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணி பயணியா் விடுதி முன்பிருந்து தொடங்கியது.
இந்தப் பேரணியை நகா்மன்றத் தலைவா் கருணாநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் ராஜாராம் முன்னிலை வகித்தாா். பேரணியில், நகா்மன்ற உறுப்பினா்கள் தவமணி, சுதா குமாரி, மணிமாலா, சித்ரா, சுகாதார அலுவலா் நாராயணன், சுகாதார ஆய்வாளா்கள் முருகன், வள்ளிராஜ், காஜாநஜ்முதீன், கொசுப்புழு ஒழிப்பு பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.