தூத்துக்குடியில் அமைச்சா் கீதா ஜீவன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி புதிய துறைமுகம் லேபா் காலனியைச் சோ்ந்தவா் நடராஜ் (38). இவா், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்கள் குறித்து அவதூறான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து திமுக தொழில்நுட்ப அணி அமைப்பாளா் பிரபு, தொ்மல் நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு நடராஜை கைது செய்தனா்.