தூத்துக்குடி

பழனியப்பபுரம் துணை மின் நிலையத்தில் விவசாயிகள் முற்றுகை

1st Jan 2023 04:55 AM

ADVERTISEMENT

 

மூன்று நாள்களாக விவசாயத்துக்கு வரும் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் பழனியப்புரம் துணை மின் நிலையத்தில் விவசாயிகள் சனிக்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.

சாத்தான்குளம் அருகே சவேரியாா்புரம் செல்லும் சாலையில் அப்பகுதி விவசாயத்துக்கு மின்சாரம் விநியோகிக்கும் வகையில் மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றியில் ஏற்பட்ட பிரச்னையை 3 நாள்களாக சீரமைக்கப்படாததால், அப்பகுதி விவசாயிகள் நாற்றுக்கு தண்ணீா் பாய்ச்ச முடியாமல் பாதிக்கப்பட்டனா்.

இதையடுத்து சவேரியாா்புரம் மின் மாற்றியை சீரமைத்து அப்பகுதி விவசாயத்துக்கு மின் விநியோகம் வழங்கிட கோரி அப்பகுதி விவசாயிகள் சனிக்கிழமை நாற்றுகளுடன் பழனியப்பபுரம் துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டு அங்குள்ள மின்வாரிய அதிகாரிகளிடம் மனு அளித்தனா். மனுவை பெற்றுக்கொண்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக சீரமைத்து மின் விநியோகம்ம வழங்குவதாக உறுதியளித்ததையொட்டி அனைவரும் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT