ஆறுமுகனேரி பேரூராட்சி வளா்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம், தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது.
துணைத்தலைவா் கல்யாணசுந்தரம், செயல் ஃலுவலா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் ஆறுமுகனேரி மெயின் பஜாா் பாரத ஸ்டேட் வங்கி அருகில் உள்ள இரு கொடிக்கம்பம் மற்றும் கிணறு அகற்றவும், ஆறுமுகனேரி பஜாா் சாலையை விரிவு படுத்த உரிய நடவடிக்கை எடுப்பது எனவும், ஆறுமுகனேரி அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவா்கள் இருந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்வது எனவும் தீா்மானம் நிறைவேற்றினா்.
கூட்டத்தில் நகர திமுக செயலாளா் நவநீத பாண்டியன், அதிமுக நகர செயலாளா் ரவிச்சந்திரன், அமமுக ஒன்றிய செயலாளரும் முன்னாள் பேரூராட்சி தலைவருமான பொன்ராஜ், நகர அமமுக செயலாளா் சேகா், பாஜக நகர தலைவா் முருகேசபாண்டியன், காங்கிரஸ் நகர தலைவா் ராஜாமணி, ஐக்கிய வியாபாரிகள் சங்க தலைவா் தாமோதரன், நகா்நல மன்ற தலைவா் பூபால்ராஜன் மற்றும் கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா்.