தூத்துக்குடி

கோவில்பட்டியில் பேருந்து நிலையம் வராத பேருந்துகள்: மாா்க்சிஸ்ட் போராட்டம்

DIN

கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் செல்ல வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை - திருநெல்வேலி வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திற்குள் முற்றிலும் வராது. மேலும், புறவழிச்சாலை கூடுதல் பேருந்து நிலையத்துக்குள்ளும் வருவதில்லையாம். பயணிகளை சாலைகளில் இறக்கிவிட்டு செல்கின்றனவாம். இதைக் கண்டித்தும், கூடுதல் பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் சென்று திரும்ப வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் சீனிவாசன், நகரக்குழு உறுப்பினா் சக்திவேல் முருகன், சிஐடியூ தொழிற்சங்கத்தைச் சோ்ந்த கிருஷ்ணவேணி, மோகன்தாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பின்னா் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.28.91 லட்சம்

சிவகங்கை தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

திமுக இஸ்லாமியா்களின் பாதுகாவலன் அல்ல: சீமான்

மலைப்பிரதேசம் என்பதிலிருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு தேவை: முதல்வரிடம் வணிகா் சங்கம் மனு

SCROLL FOR NEXT