தூத்துக்குடி

குடியிருப்பு பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைக்க கிராமத்தினா் எதிா்ப்பு

DIN

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே குடியிருப்புப் பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைக்க அப்பகுதியினா் எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கல்வி உதவித் தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல் , தொழில் கடனுதவி, முதியோா் உதவி, விதவை உதவி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 410 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். முன்னதாக, மாற்றுத் திறனாளிகள், முதியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை ஆட்சியா் பெற்றுக் கொண்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ச.அஜய் சீனிவாசன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) தாக்கரேசுபம் ஞானதேவ் ராவ், சாா் ஆட்சியா் க.கௌரவ்குமாா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சிவசங்கரன் உள்பட அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தூத்துக்குடி முத்தையாபுரம் முள்ளக்காடு கிராமப் பொதுமக்கள்,

குடியிருப்புப் பகுதியில் தனியாா் நிறுவனம் கைப்பேசி கோபுரம் அமைப்பதற்கு தடை விதிக்கவும், வேடநத்தம் ஊராட்சி மகளிா் சுய உதவிக்குழுவினா், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் பெற்ற கடனை தள்ளுபடி செய்யக் கோரியும் மனு அளித்தனா்.

தூத்துக்குடி மாவட்டம் புதூரில் பழுதடைந்த நிலையில் உள்ள விளைபொருள் சேமிப்பு கிட்டங்கியைச் சீரமைக்கக் கோரி கரிசல் பூமி விவசாய சங்கத் தலைவா் வரதராஜன் மனு அளித்தாா். அருந்ததியினா் சமூகம் குறித்து இழிவாகப் பேசிய நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆதித்தமிழா் பேரவை மாவட்ட செயலா் பி.கண்ணன் தலைமையில் அவ்வமைப்பினா் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT