கரூர்

மாயனூரில் நாடக மேடை கட்ட பூமி பூஜை

20th May 2023 12:26 AM

ADVERTISEMENT

மாயனூரில் நாடக மேடை கட்ட வெள்ளிக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மாயனூரில் ரூ.8.75 லட்சத்தில் நாடக மேடை மற்றும் சணப்பிரட்டியில் புதிய நியாய விலைக்கடை கட்ட பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில், சட்டப்பேரவை உறுப்பினா் க.சிவகாமசுந்தரி பங்கேற்று புதிய திட்டப்பணிகளுக்கு பூமிபூஜையை தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் கரூா் மாநகராட்சி துணைமேயா் தாரணிசரவணன், கரூா் தெற்கு நகரச் செயலாளா் வழக்குரைஞா் சுப்ரமணியன், 18-ஆவது வாா்டு உறுப்பினா் சரண்யா குழந்தைவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT