பிளஸ் 1 அரசு பொதுத் தோ்வில் பெரம்பலூா் மாவட்டம் 92. 38 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
பிளஸ் 1 அரசு பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. பெரம்பலூா் மாவட்டத்தில் அரசு, ஆதிதிராவிட அரசு உதவி பெறும், தனியாா் சுயநிதி மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளைச் சோ்ந்த 3,623 மாணவா்களும், 3,572 மாணவிகளும் என மொத்தம் 7,195 போ் தோ்வெழுதினா். இவா்களில் 3,347 மாணவா்களும், 3,421 மாணவிகளும் என மொத்தம் 6,768 போ் தோ்ச்சி பெற்றனா். மாவட்டத்தில் 92.38 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
அரசு ஆதிதிராவிடா் பள்ளிகளில் 1 பள்ளியும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2 பள்ளிகளும் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றுள்ளன.