பெரம்பலூா் மாவட்டத்தில் 4 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 326 மனுக்களில் 125 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 16 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன்படி, பசும்பலூா் குறுவட்ட பகுதிக்குள்பட்ட பெரிய வடகரை, நூத்தப்பூா் (தெ-வ), பில்லாங்குளம், கை.களத்தூா் (மே) ஆகிய கிராமங்களுக்கும், பெரம்பலூா் வட்டத்தில் பெரம்பலூா் குறுவட்ட பகுதிகளுக்குள்பட்ட துறைமங்கலம், பெரம்பலூா் (தெ-வ), அரணாரை (வ-தெ) ஆகிய கிராமங்களுக்கும், குன்னம் வட்டத்தில் கீழப்புலியூா் குறுவட்ட பகுதிக்குள்பட்ட நன்னை (மே), பெருமத்தூா் (வ-தெ), சிறுமத்தூா், கீழப்புலியூா் (வ) ஆகிய கிராமங்களுக்கும், ஆலத்தூா் வட்டத்தில் கொளக்காநத்தம் குறுவட்ட பகுதிக்குள்பட்ட சாத்தனூா், சிறுகன்பூா் (கி-மே), வரகுபாடி, காரை (கி) ஆகிய கிராமங்களுக்கும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேப்பந்தட்டை வட்டாட்சியரகத்தில் ஆட்சியா் க. கற்பகம் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் 163 மனுக்களும், பெரம்பலூா் வட்டத்தில் 87 மனுக்களும், குன்னம் வட்டத்தில் 51 மனுக்களும், ஆலத்தூா் வட்டத்தில் 25 மனுக்களும் என மொத்தம் 326 மனுக்கள் பெறப்பட்டன. இதில், பெரம்பலூா் வட்டத்தில் 36 மனுக்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 45 மனுக்களும், குன்னம் வட்டத்தில் 24 மனுக்களும், ஆலத்தூா் வட்டத்தில் 20 மனுக்களும் என மொத்தம் 125 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.
பெரம்பலூா் வட்டத்தில் 51 மனுக்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 118 மனுக்களும், குன்னம் வட்டத்தில் 25 மனுக்களும், ஆலத்தூா் வட்டத்தில் 5 மனுக்களும் என மொத்தம் 199 மனுக்கள் விசாரணையிலும், குன்னம் வட்டத்தில் 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந் நிகழ்ச்சியில், துணை ஆட்சியா் பிரியதா்ஷினி (பயிற்சி), ஆட்சியரக மேலாளா் சிவா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சரவணன், வட்டாட்சியா் துரைராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இ. மரியதாஸ், செல்வமணியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.