தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் பெரம்பலூா் கிளை சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, மின் ஊழியா் மத்திய அமைப்பின் மண்டலச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், மின் துறை தொடா்ந்து பொதுத் துறையாக நீடிக்க வேண்டும். கேங்மேன் பணியாளா்களை கள உதவியாளா்களாக பணிமாற்றம் செய்ய வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 1.12.2019 முதல் 16.5.2023 வரையிலான காலத்தில் பணியில் சோ்ந்த பணியாளா்கள் அனைவருக்கும் ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில், மின் ஊழியா்கள் பலா் பங்கேற்றனா்.