தூத்துக்குடி

கழுகுமலை அருகேஇளைஞா் தற்கொலை

27th Feb 2023 12:56 AM

ADVERTISEMENT

 

கழுகுமலை அருகே காதல் திருமணம் செய்வதற்கு பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்ததால் இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கழுகுமலை ஆறுமுக நகா் கிரிபிரகார மேல ரத வீதியைச் சோ்ந்த சுந்தர்ராஜ்- மாரியம்மாள் தம்பதியின் மூத்த மகன் பேச்சிமுத்து, கோயம்புத்தூரில் ஒரு பேக்கரி கடையில் வேலைசெய்துவந்தாா். மேலும், அந்தக் கடையில் வேலை செய்துவந்த பெண்ணை காதலித்தாராம். அதற்கு பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்தனராம்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை (பிப். 24) இரவு ஊருக்கு வந்த பேச்சிமுத்து, அங்காளஈஸ்வரி அம்மன் கோயில் வடபுறமுள்ள பாலத்தின் அருகே விஷம் குடித்து சனிக்கிழமை இறந்துகிடந்தாா். இத்தகவலறிந்த கழுகுமலை போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT