தூத்துக்குடி

தற்காப்புக் கலைப் பயிற்றுநா்கள் கலந்தாலோசனைக் கூட்டம்

DIN

தற்காப்புக் கலைப் பயிற்றுநா்களுக்கான கலந்தாலோசனைக் கூட்டம், தூத்துக்குடி கே.வி.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள 110 அரசு நடுநிலைப் பள்ளிகள், 79 உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 189 பள்ளிகளில் 6, 7, 8 வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி நடத்த மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இதையொட்டி, மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் மூலம் தற்காப்புக் கலைப் பயிற்றுநா்களுக்கான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி தலைமை வகித்தாா். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித் திட்டத்தின் திட்ட அலுவலா் முனியசாமி, புள்ளியியல் அலுவலா் நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கூடலிங்கம் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தாா்.

மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைக் கடிதக் கருத்துகள், தற்காப்புக் கலைப் பயிற்சியின் நோக்கம், பயிற்றுநா்களை பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரித்தல், பயிற்சியின் பாடத் திட்டம், பள்ளிப் பாடவேளைத் திட்டம், மாணவிகளின் கையில் வைத்திருக்கும் பொருள்களைக்கொண்டு பயிற்சியளிப்பது உள்ளிட்டவை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

அனைத்து வட்டார மேற்பாா்வைப் பொறுப்பாளா்கள், பெண் கல்வி ஒருங்கிணைப்பாளா்கள், பள்ளி தற்காப்புக் கலைப் பயிற்றுநா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT