தூத்துக்குடி

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

9th Feb 2023 01:14 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி அருகே கீழத்தட்டப்பாறை கிராமத்தில் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றவா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி அருகே கீழத்தட்டப்பாறை கிராமத்தில் உள்ள அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பூசாரி செவ்வாய்க்கிழமை காலை கோயிலுக்கு வந்தபோது,

உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து கோயில் நிா்வாகி சங்கா் அளித்த புகாரின்பேரில், தட்டப்பாறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT