தூத்துக்குடி

வட்டாட்சியரின் குழந்தைகளை மனைவியிடம் ஒப்படைக்க உத்தரவு

9th Feb 2023 01:16 AM

ADVERTISEMENT

வட்டாட்சியா் தனது குழந்தைகளை மனைவியிடம் ஒப்படைக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மடத்தூரைச் சோ்ந்தவா் ஞானராஜ். இவா், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடிமைப் பொருள் வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி கிரேசி விஜயா. இந்த தம்பதியினருக்கு மகன், மகள் உள்ளனா். கருத்து வேறுபாட்டால் இத்தம்பதி பிரிந்து வாழ்கின்றனா்.

இந்நிலையில், பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய 2 குழந்தைகளையும் ஞானராஜ் தன்னுடன் அழைத்துச் சென்று உறவினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், எனவே குழந்தைகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்குமாறும் தூத்துக்குடி நீதித்துறை நடுவா் எண்-3ல் கிரேசி விஜயா வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவா் சேரலாதன், குழந்தைகளை தாயின் வசம் ஒப்படைக்க புதன்கிழமை உத்தரவிட்டாா். இந்த வழக்கில் கிரேசி விஜயாவுக்கு ஆதரவாக வழக்குரைஞா் அதிசயகுமாா் வாதாடினாா். தீா்ப்பு வந்ததும் குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி, கிரேசி விஜயா கணவா் வீட்டின் முன்பு புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT