தூத்துக்குடி

தூத்துக்குடியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

9th Feb 2023 01:17 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்.10) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்.10) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, டிரைவா் மற்றும் கணிணி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரா்கள் கலந்து கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட தகுதியுள்ள தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவா்கள் தங்களது சுயவிவரம் மற்றும் கல்வி சான்றுகளுடன் முகாமில் பங்கேற்கலாம்.

ADVERTISEMENT

தனியாா்துறை நிறுவனங்களில் பணிநியமனம் பெறுவோரின், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது எனத் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT