தூத்துக்குடி

இலவச கண் பரிசோதனை முகாம்

8th Feb 2023 01:17 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் இ.எம்.ஏ.ராமச்சந்திரன் நினைவு இ.எம்.ஏ.ஆா். ரத்த தானக் கழகம் சாா்பில் இலவச கண் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .

கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் தெருவில் உள்ள மண்டபத்தில் திருநெல்வேலி ஐஸ் பவுண்டேஷன் கண் மருத்துவமனை, இ.எம்.ஏ.ஆா். ரத்த தானக் கழகம் ஆகியவை இணைந்து நடத்திய முகாமிற்கு, இ.எம்.ஏ.ஆா். ஜவுளிக்கடை இயக்குநா்கள் வெங்கட்ரமணி, முருகன் ஆகியோா் தலைமை வகித்து, முகாமை தொடங்கி வைத்தனா். கண் மருத்துவா் முகமது பைசல் தலைமையிலான மருத்துவக் குழுவினா், முகாமில் பங்கேற்ற சுமாா் 400க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்தனா். ஏற்பாடுகளை இ.எம்.ஏ.ஆா். ஜவுளிக்கடை ஊழியா்கள், ரத்த தானக் கழக அமைப்பாளா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT