தூத்துக்குடி

ஈரோடு கிழக்கு: 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வெற்றி பெறும்

8th Feb 2023 01:18 AM

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா் என அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

வேட்பாளா் இளங்கோவனை ஆதரித்து 37 ஆவது வாா்டுக்குள்பட்ட ராஜாஜிபுரம் பகுதியில் வீதிகள்தோறும் நடந்து சென்று அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரித்தாா். அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழ்நாட்டில் திமுக சாா்பில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்களால் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெற்றுள்ளனா். திமுக கூட்டணியினா் வாக்கு சேகரிக்கச் செல்லும் பகுதிகளில் மக்கள் முகமலா்ச்சியுடன் வரவேற்பு அளிப்பதே இதற்கு சாட்சி. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியின் வேட்பாளா் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா் என்றாா் அவா்.

ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா, முக்காணி தொடக்க கூட்டுறவு சங்கத் தலைவா் உமரிசங்கா், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் க.இளங்கோ, உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அஸ்ஸாப், முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வின், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் சுதாகா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT