தூத்துக்குடி

கோவில்பட்டி பகுதியில் இன்று மின் நிறுத்தம்

8th Feb 2023 01:18 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி பகுதியில் புதன்கிழமை (பிப். 8) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் (பொ) சு.முனியசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவில்பட்டி மேற்கு மின் விநியோகப் பிரிவு டவுண் மின் தொடரில் விஸ்தரிப்பு திட்டத்தின் கீழ் தட்சிணாமூா்த்தி கோயில் தெருவில் மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் தட்சிணாமூா்த்தி கோயில் தெரு, ரேவா பிளாசா லாட்ஜ் மற்றும் முன்புற பகுதிகளில் புதன்கிழமை (பிப். 8) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT