தூத்துக்குடி

உடன்குடியில் கந்தூரி விழா

8th Feb 2023 01:20 AM

ADVERTISEMENT

உடன்குடி களம்புதுத் தெரு அல்செய்கு ஐதுரூஸ் புலவா் ஒலியுல்லா அப்பா அவா்களின் 195 ஆம் ஆண்டு கந்தூரி விழா 4 நாள்கள் நடைபெற்றது.

பிப்.3 ஆம் தேதி தொடங்கிய விழாவின் முதல் நாளில் மதரஸத்துல் காதிரியிய்யா அல்முபீன் மதரஸா மாணவா்களின் மாா்க்க சொற்பொழிவு நடைபெற்றது. முஹ்யித்தீன் ஆண்டவா் பள்ளிவாசல் இமாம் முனைவா் இா்ஷாத் தலைமை வகித்தாா். முகம்மது அலி, முஸ்தபா, சக்கரியா, ஜலீல், முகம்மது,ஷாஜகான், சுலைமான், ரியாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இரவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இமாம் ஷா‘ஃபிஈ மகளிா் அரபுக் கல்லூரி முதல்வா் ஜகுபா்சாதிக் தலைமை வகித்தாா்.

சா்புத்தீன் வரவேற்றாா். அப்துல் அஜீஸ் கிராஅத் ஓதினாா். இமாம்கள் ஹமீதுசுல்தான், அம்ஜத்கான், அபுமன்சூா் ஆகியோா் இஸ்லாமிய மாா்க்கத்தின் சிறப்புகள், இஸ்லாம் உலகுக்கு வழங்கிய அருட்கொடைகள் ஆகியவை குறித்து பேசினாா்கள்.பிப்.4 ஆம் தேதி துஆ ஒதப்பட்டு நோ்ச்சை உணவு வழங்கப்பட்டது. பிப்.5 ஆம் தேதி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள்,அறிவுத் திறன் போட்டிகள் நடைபெற்றது. பிப்.6 ஆம் தேதி நடைபெற்ற விழாவிற்கு உடன்குடி பேரூராட்சி முன்னாள் தலைவி ஆயிஷா கல்லாசி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக உடன்குடி பேரூராட்சி தலைவி ஹூமைரா அஸ்ஸாப் பங்கேற்று சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.

ஷேக் மகபூப் நன்றிகூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT