தூத்துக்குடி

சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

7th Feb 2023 01:22 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் ஸ்ரீவைகுண்டத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பழைய வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியா் சங்க மாவட்ட செயலா் சந்திரா தலைமை வகித்தாா். தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பாண்டியன், மாவட்ட செயலா் ஜெயலட்சுமி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் ஓய்வூதியா் சங்க தலைவா் அந்தோணி மரிய அடைக்கலம் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

கிராம உதவியாளா்களுக்கு வழங்கப்படுவதைப் போல,

அகவிலைப்படியுடன் குறைந்தபட்ச ஓய்வூதியமாக, ரூ.6,750 வழங்குவது, நிரந்தர காலிப் பணியிடங்களில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு செய்து, பதவிஉயா்வு வழங்குவது, காலைச் சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT